பிப்.14ல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 14-ம் தேதியன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் தெரிவித்தார்.

Update: 2024-02-09 03:39 GMT

மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 3ஆம் நாள் அனைத்துநாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாளாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. அதேபோல் இந்தவருடமும் அனைத்துநாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் தொடர்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் 14.02.2024 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 9.15 மணி முதல் நடைபெறவுள்ளது. கீழ்க்கண்டவாறு போட்டிகள் நடைபெறவுள்ளது.

அ). செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கானபோட்டிகள் பலூன் ஊதுதல், பாட்டிலில் நீர் நிரப்புதல் (06 வயது வரை மற்றும் 6 முதல் 12வயது வரை ஆண் மற்றும் பெண்), ஓட்டப்பந்தயம் 100மீட்டர். (12வயதுமுதல் 14வயது வரை ஆண் மற்றும் பெண்), ஓட்டப்பந்தயம் 200மீட்டர் (15வயதுமுதல் 17வயதுவரை ஆண் மற்றும் பெண்). ஓட்டப்பந்தயம் 400 (17 வயதிற்குமேற்பட்டவர் ஆண் மற்றும் பெண்), ஆ). முற்றிலும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கானபோட்டிகள் நின்று நீளம் தாண்டுதல் (12 வயது வரை ஆண் மற்றும் பெண்), நின்று நீளம் தாண்டுதல் (12வயது முதல் 14வயது வரைஆண் மற்றும் பெண்), குண்டுஎறிதல் (15வயது முதல் 17வயது வரைஆண் மற்றும் பெண்). குண்டு எறிதல் (17 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் (சிறப்புப்பள்ளிகள்)ஆண் மற்றும் பெண்).

ஈ). கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான (நடக்கும் சக்தியற்றவர்கள்) போட்டிகள் (உதவி உபகரணங்களின் உதவியுடன்) நடைப்போட்டி 50மீட்டர் காலிப்பர் மற்றும் கால் தாங்கி உதவியுடன் நடப்பவர்கள் (12வயது வரை ஆண் மற்றும் பெண்). நடைப்போட்டி 50மீட்டர் காலிப்பர் மற்றும் கால்தாங்கி உதவியுடன் நடப்பவர்கள் (12வயது முதல் 14 வயது வரை ஆண் மற்றும் பெண்). ஓட்டப்பந்தயம் 100மீட்டர் (17 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்),

உ). கைகள் பாதிக்கப்பட்டோருக்கானபோட்டிகள் ஓட்டப்பந்தயம் 50மீட்டர் (12 வயது வரை ஆண் மற்றும் பெண்), ஓட்டப்பந்தயம் 50மீட்டர் (12 வயது முதல் 14 வயது வரை ஆண் மற்றும் பெண்). ஓட்டப்பந்தயம் 100மீட்டர் (15வயது முதல் 17வயது வரை (ஆண் மற்றும் பெண்). ஓட்டப்பந்தயம் 200மீட்டர் (17 வயதிற்குமேற்பட்டவர்கள்). ஊ) அறிவுசார் குறையுடையோருக்கானபோட்டிகள் பலூன் ஊதுதல், பாட்டிலில் நீர் நிரப்புதல் (06 வயது வரை மற்றும் 6 முதல் 12வயது வரை ஆண் மற்றும் பெண்), நின்றுநீளம் தாண்டுதல் (12வயது முதல் 14வயது வரை ஆண் மற்றும் பெண்), ஓடிநீளம் தாண்டுதல் (15வயது முதல் 17வயது வரைஆண் மற்றும் பெண்). ஓட்டப்பந்தயம் 100மீட்டர் (17 வயதிற்குமேற்பட்டஆண் மற்றும் பெண்).

எ).ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கான போட்டிகள் உருளைக்கிழங்கு சேகரித்தல் (12வயது முதல் 14வயது வரை ஆண் மற்றும் பெண்), ஏ). அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பொதுவான போட்டி ஓட்டப்பந்தயம் 400மீட்டர் (ஆண்கள் மற்றும் பெண்கள்). மேற்காணும் விளையாட்டுப் போட்டிகள் 14.02.2024 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 9.15 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்கழ்வில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்துக்கொள்ளுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்., தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News