மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகள் வழங்கினார்.;

Update: 2023-12-10 03:18 GMT

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய மேயர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாற்றுத்திறனாளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை, பண்பாடு நிகழ்ச்சிகள் நடத்த தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரெஜினி, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News