அமராவதி நகரில் விளையாட்டு போட்டிகள்

அமராவதி நகரில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

Update: 2024-01-28 12:55 GMT

நடன போட்டியில் ஆடும் கலைஞர்கள்

 கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் உள்ள அமராவதி நகரில் தமிழன் நற்பவி மன்றம் சார்பில் 7-ம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள், இன்று காலை துவங்கி இரவு வரை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமராவதி நகரில் வசிக்கும், பள்ளி மாணவ- மாணவியர், இளைஞர் மற்றும் இளம் பெண்கள், பொதுமக்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இரவு நேரத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இசைக்கலைஞர்கள் "வாரிசு" தமிழ் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து பாடி ஆடிய "ரஞ்சிதமே" பாடல் இசைக்கப்பட்டது. இந்தப் பாடலுக்கு ஏற்வாறு நடன அசைவுகளை அமைத்து குத்தாட்டம் போட்டு இசை கலைஞர்கள் ஆடியது,

அனைவரையும் அதிரவைத்தது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கரூர் தெற்கு மாநகர அதிமுக செயலாளர் வி சி கே ஜெயராஜ் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற சிறைத்துறை அலுவலர் தங்கராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஷ், தமிழன் நற்பவி மன்ற பொறுப்பாளர்கள் வெற்றிச்செல்வம், மூர்த்தி, மனோகர், தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News