மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.;

Update: 2023-11-26 04:22 GMT
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நேற்று தொடங்கியது. முன்னதாக மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்  ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து ஓட்ட போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்  கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  100 மீ, 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்ட போட்டிகள் நடைபெற்றன. தடகள போட்டிகளான நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் உள்ளிட்ட ஐந்து விதமான போட்டிகள் நடைபெற்றன. மாவட்டத்தின் 10 பள்ளிகளைச் சார்ந்த 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News