விவாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூரில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-02-22 11:00 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் தமிழக பட்ஜெட்டில் பாலாறு குறித்த பிரச்சனைக்கு நிதி ஒதுக்காதது வேதனை அளிப்பதாக விவசாயிகள் கருத்து. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்கனவே விவசாயிகள் தரப்பில் இருந்து பெறப்பட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்றது. அப்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தினந்தோறும் மூன்று அல்லது நான்கு இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாகவும் இது சம்பந்தமாக ஏற்கனவே இருந்த மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றும் வேளாண் துறை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு தரமற்ற மருந்து கொடுக்கப்படுவதால் விவசாயம் செய்ய முடியவில்லை எனவே விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வேளாண் பட்ஜெட்டில் அட்டவணை செய்யப்பட்ட பாலாறு குறித்த பிரச்சனைக்கு பட்ஜெட்டில் பெயரே இடம்பெறவில்லை என்றும் சுகாதார சீர்கேடு குறித்து இந்திய அரசு தமிழக அரசிடம் 30 ஆண்டுகளாக அறிக்கை கேட்டும் இதுவரை பாலாறு சுகாதார சீர்கேடு குறித்த அறிக்கையை கூட அனுப்பவில்லை. இந்த நதிநீர் இணைப்பு திட்டமெல்லாம் வெறும் தேர்தல் வாக்குறுதியாகவே போய்விடுகிறது என்று வேதனை தெரிவித்தனர். மேலும் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக விவசாய தெரிவித்தார் கிருஷ்ணாபுரம் பகுதி சேர்ந்த விவசாயி கூறுகையில் கத்திரி செடி சாகுபடி செய்து இருந்தேன் தரமான விதை இல்லாததால் காய்கள் காய்க்காமல் செடியை வெட்டி வீழ்த்தி விட்டேன் தென்னை விவசாயிகள் கூறுகையில் இந்த மாவட்டத்தில் பதநீர் இருக்க அனுமதி வழங்க வேண்டும் திருப்பத்தூர் கேத்தாண்டிப்பட்டி சர்க்கரை ஆலை அரசு அதிகாரிகள் சரியான பணிகளை செய்யாததால் கரும்பு விவசாயி வேதனை அவர்களை இடமாற்றம் செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் இந்த கூட்டத்தில் வேளாண் துறை மற்றும் விவசாயிகள் அரசு சார்ந்த பல்வேறு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News