நெற்பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணி மும்முரம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீர் வடிந்துவரும்நிலையில் பூச்சி மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
By : King 24X7 News (B)
Update: 2023-11-21 13:30 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு ஒருலட்சத்து 86 ஆயிரம் ஏக்கரில் சம்பா,தாளடி நெல்சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு லட்சத்து 68 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், நடவு முடிந்துள்ளது,.நிலத்தடி நீரைக் கொண்டு பெரும்பாலும், பயிர் செய்யப்பட்டுவருகிறது.
ஐப்பசி முதல் வாரத்தில் பெய்யக்கூடிய பருவமழை தவறி, இறுதி வாரத்தில், பெய்ததுடன் போதிய அளவும் பெய்யவில்லை,. மழைவிட்டுவிட்டும் பெய்தது இடையிடையை பனியும் பெய்தது, தேங்கிய நீரும் வடிந்துவிட்டது. பயிர்களில் சோலைபூச்சி, வெள்ளை பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. தற்பொழுது வெயில் அடித்துவருவதால், மயிலாடுதுறை தாலுக்கா வடக்குப் பகுதியில் பயிர்களுக்கு மருந்துதெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.