சங்கரன்கோவிலில் வசந்த உற்சவம் 3ம் நாள் நிகழ்ச்சி

சங்கரன்கோவிலில் வசந்த உற்சவம் 3ம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2024-05-17 15:46 GMT

வசந்த உற்சவம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண கோமதி அம்பாள் திருக்கோவில் வசந்த உற்சவம் 3ம் நாள் நிகழ்ச்சி கோவில் உட்பிராகாரத்தில் வைத்து வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் கோமதி அம்பாளுக்கு பால்,மஞ்சள்,சந்தனம், இளநீர்,

குங்குமம், கரும்புச் சார் உள்ளிட்ட 32 வகையான திரவங்கள் கொண்டும் சிறப்பு மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News