ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
தென்காசி அருகே ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-04-19 03:07 GMT
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி 24 மனை(சாது) தெலுங்கு செட்டியார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நேற்று இரவு நடைபெற்றது. அதனை முன்னிட்டு விக்னேஷ் வர பூஜை கணபதி ஹோமம் நூதன ஆலய கிரகப்பிரவேசம் (பால் காய்ச்சுதல்) பூஜா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.