ஸ்ரீகெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அத்தியந்தல் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-28 04:58 GMT
கும்பாபிஷேகம் 

திருவண்ணாமலை அருகே அத்தியந்தல் ஊராட்சிக்குட்பட்ட மதுரா சின்ன கோட்டங்கள் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கெங்கையம்மனை வழிபட்டனர்.

முன்னதாக அதிகாலை கணபதி முருகர் ஹோமம், கோ பூஜை செய்யப்பட்டு நான்காம் கால பூஜைகள் செய்து பூர்ணாஷூதி பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீரை சிவச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வழிபாடு செய்து கோவில் மேல் உள்ள கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

சிவாச்சாரியார் முன்னிலையில், கோவில் குழு அறங்காவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு கலசங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஊர் பொதுமக்கள். இளைஞர் அணி, மகளிர் அணி என சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags:    

Similar News