ஸ்ரீ செல்வ கணபதி கோவில் கும்பாபிஷேகம்

மகாதானபுரம், செல்வ கணபதி கோவில் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடந்தது.

Update: 2024-02-19 08:41 GMT

 . கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட, மகாதானபுரம், தெற்கு கிராமத்தில் உள்ள குப்புரெட்டிபட்டி யில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வகணபதி, ஸ்ரீ தேவி பூதேவி சமேத வெங்கடேச பெருமாள், ஸ்ரீ சீலைக்காரியம்மன், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சந்தன கருப்பு மற்றும் மதுரைவீரன் ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜையும், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, தத்வார்ச்சனை, தத்வஹோமம், திரவ்யாஹூதி, பர்சாஹூதி, பூர்ணாஹூதி, நாடி சந்தானம், நயயோன் மீலனும், யாத்ரா தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்து, அனைத்து தெய்வங்களுக்கும் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு செண்டை மேளங்கள் முழங்க, ஏழுமலையான் பங்காளிகள், மாமன் மைத்துனர்கள் புடை சூழ, சீர்வரிசைகளை எடுத்துச் சென்று கோவிலில் கொடுத்து கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News