ஸ்ரீ தனிக்காட்டு கருப்பணசாமி ஆலய கும்பாபிஷேக விழா

பண்டுதக்காரன் புதூரில் ஸ்ரீ தனிக்காட்டு கருப்பணசாமி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-06-16 13:57 GMT

பண்டுதக்காரன் புதூரில் ஸ்ரீ தனிக்காட்டு கருப்பணசாமி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சியில் உள்ள பண்டுதகாரன் புதூரில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தனிக்காட்டு கருப்பண்ண சுவாமி ஆலயம் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை மங்கல இசை உடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து விநாயகர் வழிபாடு, புண்ணியாகவனம், வேதி கார்ச்சனை, யாக ஹோமம், நாடி சந்தானம், மூர்த்தி ஹோமம், காயத்ரி ஹோமம், தத்வ ஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று, நான்காம் கால பூஜையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை, கோவில் கலசத்திற்கு எடுத்துச் சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கடம்பன்குறிச்சி ஊராட்சி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழா கமிட்டியின் சார்பாக, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News