எடப்பாடி நாச்சிப்பாளையத்தில் ஸ்ரீகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

எடப்பாடி நாச்சிப்பாளையத்தில் ஸ்ரீகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-02-09 13:58 GMT


எடப்பாடி நாச்சிப்பாளையத்தில் ஸ்ரீகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


எடப்பாடி நாச்சிப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நாச்சிப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 2ம் தேதி வெள்ளிக்கிழமை பூச்சாட்டுதழ்களுடன் தொடங்கியது.

தொடர்ந்து காளியம்மன் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று தீபாராதனைகள் காட்டப்பட்டது.  இந்நிலையில் இன்று அதிகாலையில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட 42 அடி நீளம் கொண்ட அக்னி குண்டத்தில் முதலில் கோவில் பூசாரி கரகத்துடன் தீ மிதித்த பின்னர் சில பக்தர்கள் குழந்தைகளை கையில் ஏந்தியபடியும், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளியான ஒருவர் என ஏராளமானோர் கோவிந்தா, கோவிந்தா, என முழக்கமிட்டபடி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர். இந்த தீமிதி திருவிழாவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags:    

Similar News