ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பூச்சாட்டுதல் - திருவீதி உலா
Update: 2023-11-03 02:55 GMT
திருவீதி உலா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஐப்பசி மாதம் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் ஐப்பசி ஏழாம் நாள் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதல் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளான கம்பம் நடும் விழா மற்றும் பல்வேறு கட்டளைதாரர்களின் சுவாமி திருவீதி உலா சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. எட்டாம் நாள் மண்டபக் கட்டளை பண்டிகை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் உற்சவர் புஷ்ப பல்லாக்கில் செண்டை மேளம் முழங்க கேரள தெய்யம் நடனம் மற்றும் வான வேடிக்கையுடன் தியாகராஜ சுவாமி தெரு, சௌராஷ்ட்ரா தெரு மற்றும் முக்கிய பகுதியில் சாமி திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி உற்சவ திருவீதி உலாவை கண்டு ரசித்து பூஜை செய்து சென்றனர். முன்னதாக ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்களான பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் ,இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் மகா தீபாரணை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்து அன்னதானம் பெற்று சென்றனர்.