ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் விமான பாலாலயம் நடைபெற்றது

ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள தென் திருப்பதி என்று அழைக்கப்படும், ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் விமான பாலாலயம் நடைபெற்றது.

Update: 2023-12-09 08:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று கர்ப்பக்கிரக விமானத்திற்கு பாலாலயம் நடைபெற்றது. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வா ஒம் ஊர் என்று பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரானது 108 வைணவ ஸ்தலங்களில் மிக முக்கியமான ஸ்தலமாகும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் அமைந்துள்ள ஊரின் அருகே திருவண்ணாமலை என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் தென் திருப்பதி எனப்படும் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் மலை உச்சியில் நின்ற கோளத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மானிட பெண்ணாகப் பிறந்து இறைவனுக்கு பூமாலை சுட்டி பின் பாமாலை பாடி ஸ்ரீ விஷ்ணுவை அடைந்த சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஸ்ரீ ஆண்டாளை திருமணம் செய்வதற்காக திருமலையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ஸ்ரீனிவாச பெருமாள் இங்குள்ள தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலையில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக ஐதீகமாகும். இச்சிறப்பு மிக்க இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது 40 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேக வேலைகள் இன்று துவங்கியது. முதற்கட்டமாக கோவிலின் கர்ப்பக்கிரக விமானம் மற்றும் இதர விமானங்களுக்கு பாலாலயம். நடைபெற்றது. பாலாலயத்தை தொடர்ந்து இன்று முதல் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் சில நாட்களுக்கு நடைபெறும். விரைவில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கும்பாபிஷேக பிரதான உபயதாரர்களான அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகிகள், திருக்கோவில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News