குண்டும்,குழியுமாக மாறிய ஸ்ரீபெரும்புதுார்-குன்றத்துார் சாலை

Update: 2023-11-27 04:04 GMT

குண்டும் குழியுமாக மாறிய சாலை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார்- - குன்றத்துார் பிரசான சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் இச்சாலையில், 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். இந்த நிலையில், கடந்த சில நாட்கள் பெய்த மழையால், சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்வோர் குண்டும்,குழியுமான சாலையில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும், 'பீக் ஹவர்' நேரங்களில், பட்டுநுால் சத்திரம் முதல், கச்சிபட்டு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறையினர் இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News