சிவில் நீதிபதியாக தேர்வான எஸ்எஸ்ஐ மகள் - எஸ்பி வாழ்த்து

சிவில் நீதிபதியாக தேர்வான எஸ்.எஸ்.ஐயின் மகளுக்கு மாவட்ட எஸ்பி ஹர்ஷ் சிங் வாழ்த்து தெரிவித்தார்.;

Update: 2024-02-20 05:50 GMT

எஸ்பி வாழ்த்து 

நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராஜேந்திரன் (56)- சுமதி(50) இவர்களின் புதல்வி செல்வி ரேவதி(27) கடந்தாண்டு 2023 நடைபெற்ற உரிமையியல் நீதிபதி தேர்வில் கலந்து கொண்டு மாநில அளவில் 18 வது இடத்தை பிடித்து நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் நாகை மாவட்டம், மஞ்சக்கண்ணி, மருதூர் வடக்கு பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் ஒரு சிறிய கிராமத்தில் ,தனது தந்தைக்கு மூன்றாவது பிறந்த பெண் குழந்தை ஆவார்.

Advertisement

அடிப்படை வசதி இல்லாமல் தொடர்ந்து அரசு பள்ளியிலும், அரசு கல்லூரியிலும் படித்துவிட்டு ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து இந்த சிறிய வயதில் குற்றவியல் நீதிபதி தேர்வுக்கு தேர்ச்சி பெற்றது எப்படி என்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்  ஹர்ஷ் சிங் கேட்கையில், இவை அனைத்தும் எனது தந்தை ராஜேந்திரன் அவர்கள் அளித்த ஊக்கமே காரணம் என்றும், எனது தந்தை காவல்துறையில் சேர்ந்து வாங்கிய முழு சம்பளத்தையும் எங்களுடைய படிப்பிற்காக மட்டுமே செலவழித்தாகவும், இந்த வெற்றியை என் தந்தைக்கு உரித்தாக்கி கொள்கிறேன் என்றும் தெரிவித்தார், மேலும் நான் பயிற்சி முடித்துவிட்டு குற்றவியல் நீதிபதி ஆனதும் எனது தந்தை போல் நேர்மையாக பணியாற்றுவேன் என்று கூறினார். மேலும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் அவருக்கு அறிவுரைகள் வழங்கியதுடன் புத்தகங்கள் மற்றும் சால்வை அணிவித்து கௌரவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags:    

Similar News