பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட நாகை தூய பேதுரு ஆலயம்

டச்சுக்காரர்களின் கட்டிடக்கலை மற்றும் பாரம்பரியத்தை 250 ஆண்டுகளாக தாங்கி நிற்கும் நாகை தூய பேதுரு ஆலயம் ரூ. 75 லட்சம் மதிப்பில் பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது காண்போர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

Update: 2024-05-26 03:55 GMT

நாகை தூய பேதுரு ஆலயம்

நாகை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தூய பேதுரு ஆலயம் கிபி 1774 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 250 ஆண்டுகளாக டச்சு காரர்களின் வரலாற்று சுவடாக நிலைத்து நிற்கும் இந்த ஆலயம் நாகை மக்களின் அடையாள சின்னமாக விளங்கி வருகிறது.

சூரிய ஒளி சுட்ட செங்கல்களாலும், மொழுக்கப்பட்ட தரையும், பனை மர உத்திரங்கள் மற்றும் ஓட்டினால் ஆன கூரைகளால் டச்சு பாரம்பரிய கட்டிடக்கலையில் இந்த பேராலயம் கட்டப்பட்டது. சுண்ணாம்பு கற்களால் பிரமாண்ட தூண்கள் அமைக்கப்பட்டு கட்டப்பட்ட இந்த சபை மழைநீர் உட்புகுதல் , புயல் பாதிப்பு என பல்வேறு பேரிடர்கள் காரணமாக நாளுக்குநாள் சேதமடைந்து வந்தது. இப்பகுதியில் இலவசமாக கல்வியையும், மருத்துவத்தையும் அளித்துவந்த டச்சு அரசு மக்களின் வழிபாட்டிற்காக முழுவதும் டச்சு கட்டிடக்கலையை மையபடுத்தி இந்த ஆலயம் கட்டப்பட்டது.

சேதமடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டு காணப்பட்டதை பார்த்த தன்னார்வலர்கள் ஆலயத்தை புனரமைக்க முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து கடந்த 1 வருட காலமாக பேராலயம் புணரமைக்கும் பணிகள் நடந்து வந்தது. அதன்படி பழமை அழியாமல் ஆலயத்தின் உட்புறம் முழுவதும் தேக்கு மரங்களால் கலை நுட்பங்களால் செதுக்கி புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. சமூக நல்லிணக்க பூமியான நாகை மாவட்டத்தை சேர்ந்த அனைத்துதரப்பு மக்களின் பங்களிப்போடு சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் புனரமைப்பு பணிகளை பலரும் வியப்போடு பார்வையிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News