பிரதான சாலையில் தேங்கி நின்ற மழை நீர்- மரக்காணம் சேர்மன் ஆய்வு.

Update: 2023-11-23 07:02 GMT
ஆய்வு 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது, கனமழை காரணமாக ஆங்காங்கே நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகிறது, இந்த நிலையில் பிரம்மதேசம் அடுத்த சிறுவாடி கிராமத்தில் இரண்டு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக சிறுவாடி கிராமத்தில் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி செல்லும் பிரதான சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர், இது குறித்து தகவல் அறிந்த மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேங்கி நின்ற மழை நீரை அகற்றவும், ஒவ்வொரு மழையின் போதும் சிறுவாடி கிராமத்தில் இதே நிலைமை நீடிப்பதால் மழை நீர் தேங்காத வண்ணம் இருக்க நிரந்தர தீர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் துறை சார்ந்தவர்களுக்கு உத்தரவிட்டார் இந்த ஆய்வின்போது மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமு, திருவேங்கடம் மற்றும் மரக்காணம் மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த் துறையினர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், கிராம மக்கள் என பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News