ஆத்தூர்: இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் தேர்தல் பிரச்சாரம்
ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 8,21,23, ஆகிய வார்டுகளில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணி,நகர பொருளாளர் ராமசந்திரன் இரண்டரை ஆண்டுகள் திமுக சாதனைகளை விளக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-02-29 06:04 GMT
தேர்தல் பிரச்சாரம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 8, 21,23 ஆகிய வார்டு பகுதிகளில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக நகரச் செயலாளர் பாலசுப்பிரமணி, நகரப் பொருளாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட திமுகவினர் வார்டு பகுதிகளில் இரண்டரை ஆண்டு திமுக சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இதில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் இளங்கோவன், வார்டு செயலாளர்கள் S.S.ராஜேந்திரன், சாரதா, யூனுஸ், நகர மன்ற உறுப்பினர் பாஸ்கர், செண்பகம் தம்பிதுரை மற்றும் கிளைகழக நிர்வாகிகள் மணி, மற்றும் கிளைகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்