கீரைக்காய் சீசன் துவக்கம் - கிலோ ரூ.80க்கு விற்பனை

காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் நீர் சத்து அதிகமுள்ள கீரைக்காயை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

Update: 2024-03-04 07:06 GMT

கீரைக்காய்

காஞ்சிபுரத்தில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு நிலவினாலும், சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலுக்கு உடல் உஷ்ணத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி தரும் வகையில், தர்பூசணி, கிர்ணி, இளநீர் உள்ளிட்டவையும் காஞ்சிபுரத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடப்படும் கீரைக்காய், காஞ்சிபுரம் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், ராஜ வீதி, கலெக்ட்ரேட், டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை மற்றும் நடமாடும் கடைகளில் கீரைக்காய் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு கோடையில், அதிகபட்சமாக கிலோ கீரைக்காய் 120 ரூபாய் வரை விற்பனையானது. தற்போதுதான், சீசன் துவங்கியுள்ளது இதனால், கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு வரத்து அதிகரித்தால், ஒரு மாதத்தில் விலை பாதியாக குறையும். பல்வேறு மருத்துவ குணமும், நீர்ச்சத்தும் அதிகம் உள்ள கீரைக்காயை, பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்கி செல்கின்றனர் என, வியாபாரிகள் தெரிவித்தனர்."

Tags:    

Similar News