பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

சேலத்தில் நடந்த தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் மாநில பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.;

Update: 2024-02-19 01:26 GMT

பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில்  நடந்தது. மாநில தலைவர் சேது செல்வம் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் மாயவன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஜான் பிரேம்குமார் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாநில பொருளாளர் விஜய சாரதி ஆகியோர் ஓராண்டு அறிக்கை அளித்து பேசினர்.

கூட்டத்தில், ஆசிரியர்களுக்கும்,அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடிஏ விடுப்பை ஒப்படைத்து அதற்கான ஊதியத்தை பெறும் உரிமையை வழங்க வேண்டும். 2004 முதல் 2006 வரை காலக்கட்டத்தில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை நியமனமான நாளில் இருந்து பணி வரன்முறை செய்து ஆணை வழங்க வேண்டும்,

10ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி செய்முறை தேர்வு இல்லாத பாடங்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்ணாக 10 மதிப்பெண் வழங்கி அம்மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற பள்ளி கல்வித்துறைக்கு கேட்டுகொள்வது, மார்ச் 10ம் தேதி மகளிர் மாநாட்டை திருவண்ணாமலையில் நடத்துவது என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணை தலைவர் ரமேஷ்பாபு உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News