மாநில அளவிலான கராத்தே - மாணவர்கள் சாதனை

சித்தனூரில் நடந்த மாநில அளவிலான சோபுகாய் ஓபன் சாம்பியன் ஷிப் கராத்தே போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற சோபுகாய் கராத்தே அகாடமி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-02-07 10:06 GMT
சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்கள் 
சேலம் சித்தனூரில் மாநில அளவிலான சோபுகாய் ஓபன் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. இதில் சேலம் சிவதாபுரம் பனங்காடு சோபுகாய் கராத்தே அகாடமி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் கோப்பையை பெற்று சாதனை படைத்தனர். இந்த மாணவ- மாணவிகளை தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க மாநில செயலாளர் அல்தாப் ஆலம், மாவட்ட சோபுகாய் கராத்தே செயலாளர் செண்பகராஜ், சோபுகாய் கராத்தே அகாடமி சிவகுமார் ஆகியோர் பாராட்டினர்.
Tags:    

Similar News