மாநில யோகா - பதக்கங்களை குவித்த அரசு பள்ளி
மதுரையில் நடந்த மாநில அளவிலான யோகாசன போட்டியில் வார்ப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவர்கள் 12 பதக்கங்களை குவித்து அசத்தினர்.;
Update: 2024-01-22 07:30 GMT
அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்
மதுரை ஒத்தக்கடையில் டெக்கத்தலான் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஹையாஸ் யோகா பள்ளி சார்பில் மாநில அளவிலான யோகாசன போட்டி நடந்தது. இதில் வார்ப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆறு தங்கப்பதக்கம், ஏழு வெள்ளி பதக்கம் மற்றும் 12 வெண்கல பதக்கங்களை வென்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் பாராட்டியுள்ளனர்.