மாநில மூத்தோர் தடகளம் : பொன்னமராவதி நூலக பெண் உதவியாளர் வெற்றி
Update: 2023-12-21 06:51 GMT
சண்முகவள்ளி
தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் சார்பில் 41வது மாநில அளவிலான தமிழ்நாடு மூத்தவர் தடகள போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டம் விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில் பொன்னமராவதி சார்ந்த க. சண்முகவள்ளி பங்கேற்று பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்ட போட்டியில் 55 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இவர் பொன்னமராவதி அருகே உள்ள பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக்கல்லூரியில் நூலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஏற்கனவே 2015ல் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3 இடமும், கடந்த ஆண்டு ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும், 400 மீட்டரில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்தோர் தடகள போட்டியில் சிறப்பிடம் பெற்ற சண்முகவள்ளியை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.