உசிலம்பட்டியில் தொழிற்சங்கம் விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டம்

உசிலம்பட்டியில் மத்திய அரசை கண்டித்து மத்திய மாநில தொழிற்சங்கம் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-02-16 08:48 GMT


உசிலம்பட்டியில் மத்திய அரசை கண்டித்து மத்திய மாநில தொழிற்சங்கம் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர்.


உசிலம்பட்டியில் மத்திய அரசை கண்டித்து மத்திய மாநில தொழிற்சங்கம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்கங்கள் ஒன்றிணைந்து பேரையூர் ரோட்டில் ஸ்டேட் பேங்க் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மத்திய மாநில தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மார்க்.கம்யூனிஸ்ட் கட்சியினர் தோழமைக் கட்சியுடன் ஒன்றிணைந்து முருகன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் முன்பு மத்திய அரசு கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் தேசிய குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் மின்சாரம் சட்டத்தை திருத்த வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உணவு மருந்து இயந்திரங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி எஸ் டி வரிய ரத்து செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 150க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலிசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News