வக்கீல்களுக்கான மாநில  கைப்பந்து போட்டி துவங்கியது 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வக்கீல்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கியது.

Update: 2024-03-23 11:27 GMT

வக்கீல்களுக்கான மாநில  கைப்பந்து போட்டி துவங்கியது 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வக்கீல்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி இன்று 23ஆம் தேதி காலை தொடங்கியது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, கோவை தென்காசி, கடலூர், அரியலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, தர்மபுரி, திருவள்ளூர் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30 அணிகள் பங்கேற்றுள்ளனர்.

முதலில் லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. இதில் அதிக புள்ளிகளை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிப்படும். இதில் வெற்றி பெற அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. இறுதி போட்டி நாளை 24ஆம் தேதி நடக்கிறது: பரிசளிப்பு விழா நாளை மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள வக்கீல் சங்க கட்டத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியை மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார். மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜோசப் ஜாய், தலைமை குற்றவியல் நீதிபதி கோகுலகிருஷ்ணன், சார்பு நீதிபதி முருகன், 2-வது கூடுதல் சார்பு நீதிபதி முகமது அசன், வக்கீல் சங்க தலைவர் பால ஜனாதிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News