கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம்
ஆலத்தூர் வட்டம் புது அம்மாபாளையம் கிராமத்தில் கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின்கீழ், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் புது அம்மாபாளையம் கிராமத்தில் கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம், நடைபெற்றது.
இந்த முகாமில் விவசாயிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை, இனப்பெருக்க பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் ஊட்டச்சத்து மேலாண்மைக்காக தாது உப்புக்கலவை வழங்கப்பட்டன . இதில் மண்டல இணை இயக்குநர் நாராயணன், உதவி இயக்குனர் தமிழரசு, கால்நடை உதவி மருத்துவர் சுகன்யா உள்ளிட்ட கால்நடை மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் இந்த முகாமில் தேசிய விலங்கு நோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கான, முன்னெச்சரிக்கையாக தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில் திரளான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை மேற்கொண்டு. பயனடைந்தனர்.