புனிதமிக்கேல் அதிதூதர் ஆலய தேர்பவனி விழா

சங்கராபுரம் அருகே பிரசித்தி பெற்ற புனிதமிக்கேல் அதிதூதர் ஆலயம் தேர்பவனி விழாவில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.;

Update: 2024-05-09 07:00 GMT

தேர்பவனி 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பிரசித்தி பெற்ற புனிதமிக்கேல் அதிதூதர் ஆலயம் தேர்பவனி வெகு விமரிசையாக நடைபெறுவது, ஏராளமான கிறித்தவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மைக்கேல்புரத்தில் பிரசித்தி பெற்ற புனிதமிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 3-ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement

அதனை தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது தேர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தேர்களில் புனித ஆரோக்கிய மாதா, குழந்தை இயேசு, ஜெபஸ்தியார்,சூசையப்பர், வைக்கப்பட்டது ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் சவேரியார்பாளையம், ஈருடையாம்பட்டு,மைக்கேல்புரம், அருளம்பாடி,கானாங்காடு,மேல்சிறுவளூர்,கானாங்காடு, அந்தோணியார்புரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Tags:    

Similar News