மருத்துவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் பாராட்டு

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுவனுக்கு இதய துளைத்து சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களை எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணியினர் பாராட்டினர்.

Update: 2024-02-18 08:00 GMT

மருத்துவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் பாராட்டு

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆலங்குளத்தை சேர்ந்த டேனிசன் என்ற 11 வயது சிறுவனுக்கு இதயத்தை துளைத்து சாதுர்யமாக சிகிச்சை அளித்து மீட்ட மருத்துவர்களை எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணியினர் இன்று 18/02/24 பாராட்டினர். இந்த நிகழ்வின்போது எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் தாழை உசேன், பொருளாளர் போத்தீஸ் முகமது உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News