கழுதை மீது சாம்பல் அடித்து வினோத சடங்கு

விராலிமலை அருகே விராலுர் குரும்பச்சி அம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, கழுதை மீது ஊர்வலம் வந்து சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-04-29 10:14 GMT

தமிழகத்திலேயே சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு இங்கு மட்டுமே நடைபெறுவது ஒரு தனிச்சிறப்பாகும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள விராலுர் குரும்பச்சி அம்மன் கோவில் உள்ளது எங்க ஒவ்வொரு வருடமும் திருவிழாவிற்கு முன்பு 18 ஊர் பொதுமக்கள் சேர்ந்து கழுதை மீது சாம்பல் அடிக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

  அதே போல் இந்த வருடமும் திருவிழா நடத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு முன்பாக நடைபெறும் சாம்பல் அடிக்கும் சம்பிரதாய நிகழ்வு இன்று சடங்கு நடைபெற்றது இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வேடமணிந்து ஊர்வலமாக வந்து கோவில் அருகே உள்ள குளக்கரையில் இறுதி சடங்கை நடத்தும் நிகழ்வு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கழுதை மீது ஊர் பொதுமக்கள் சார்பில் ஒருவரை மேலே ஏற்றி அவர்கள் மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வானது நடைபெற்றது.

  பின்னர் இன்று இரவு குரும்பச்சி அம்மனுக்கு காப்பு கட்டி அதனைத் தொடர்ந்து தினமும் 21நாட்களுக்கு ஒவ்வொரு சமூகத்தையும் சார்ந்தவர்களும் பூஜை செய்து 22-ம் நாளன்று அனைத்து சமூகத்தினரும் ஜாதி பேதம் இன்றி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்

Tags:    

Similar News