வதந்தி பரப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - எஸ் பி எச்சரிக்கை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை சம்பவத்தை தற்போது நடந்தது போல சமூக வலைத்தளங்களில் பரப்பி மக்களை அச்சுறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.;
Update: 2024-01-07 07:26 GMT
எஸ்பி ஜெயக்குமார்
கடந்த 2021 ஆம் ஆண்டு நீடாமங்கலத்தில் நடைபெற்ற சிபிஐ ஒன்றிய செயலாளர் நடேசன் தமிழ் ஆர்வன் கொலை சம்பவத்தை தற்போது நடைபெற்றது போன்று நீடாமங்கலம் பகுதியில் கொலை நடந்திருக்கிறது, அதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது ,தஞ்சாவூர் செல்லக்கூடிய நபர்கள் மன்னார்குடி வழியாக செல்லவும் என வாட்ஸ் அப் குழுவில் தற்போது வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத வதந்தி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் நபர் மீது சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்பி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது