மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உடனே விடுவிக்க கோரி போராட்டம்

மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உடனே விடுவிக்க கோரி ஜூன்12 இல் சாலை மறியல் போராட்டம் நடக்க உள்ளது.

Update: 2024-06-10 15:31 GMT

மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உடனே விடுவிக்க கோரி ஜூன்12 இல் சாலை மறியல் போராட்டம் நடக்க உள்ளது.


மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க கோரி,  சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சிஐடியு மீனவர் சங்கம் சார்பில், செந்தலைப்பட்டினம் பேருந்து நிறுத்துமிடம் அருகே புதன்கிழமை காலை 11 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது.

மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை சார்பில் ரூபாய் 8,000 நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.  இந்நிலையில், தஞ்சை மாவட்ட கடலோர கிராமங்களில் மீன்பிடித் தொழில் செய்து வரும் பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில்  500க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு,  அரசு அறிவித்துள்ள ரூபாய் 8,000 நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

எனவே, இதனைக் கண்டித்து வரும் ஜூன் 12ஆம் தேதி, புதன்கிழமை காலை 11 மணியளவில், கிழக்கு கடற்கரைச் சாலையில் செந்தலைப்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில், சிஐடியு மீனவர் சங்கம் சார்பில், சகாபுதீன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி, ஒன்றியக குழு உறுப்பினர் பி. பெரியண்ணன், வழக்குரைஞர் வீ.கருப்பையன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் மற்றும் திரளான மீனவர்கள் பங்கேற்பார்கள்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News