மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
வரகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;
Update: 2024-03-06 04:10 GMT
வரகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சங்கராபுரம் அடுத்த வரகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா தலைமை தாங்கினார். ஊர்வலத்தை ஊராட்சி தலைவர் காவியா தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக, பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி சென்றனர். ஊர்வலத்தில், பள்ளி மாணவர்கள், மேலாண்மைக் குழு தலைவர் வேளாங்கண்ணி, உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். உதவி ஆசிரியர் ஜான் ரத்தினம் நன்றி கூறினார்.