மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
செண்பகராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சார்பில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பது குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;
Update: 2024-03-05 08:11 GMT
விழிப்புணர்வு பேரணி
நெல்லை மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள செண்பகராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வள்ளியூர் கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஷெர்லின் விமல் தலைமை வகித்தார்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விமலா, மாவட்ட உதவி திட்ட அலுவலர் முகமது பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.