தந்தை கண்டித்ததால் மாணவன் தற்கொலை
மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர்;
Update: 2023-12-11 08:39 GMT
தந்தை கண்டித்ததால் மாணவன் தற்கொலை
திருத்தணி அடுத்த பூனிமாங்காடு வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் காமராஜ், 21. இவர், திருத்தணி -அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்.காம்., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 8 ம் தேதி காமராஜ், கல்லுாரியில் நடந்த தேர்வுக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து, ஏன் தேர்வுக்கு செல்லவில்லை என காமராஜிடம், அவரது தந்தை குமார் கேட்டு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த காமராஜ், நேற்று முன்தினம் மாலை பூச்சி மருந்து குடித்து வீட்டின் அருகே மயங்கி விழுந்தார். அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி காமராஜ் உயிரிழந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.