பிளஸ் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஊத்தங்கரை அருகே +2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சமபவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-20 05:38 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகள் திருமலா கீழ்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் தேர்ச்சி பெற்றும் மதிப்பெண் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையிலிருந்து திருமலா கடந்த பன்னிரண்டாம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு கொண்டார்.

வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News