பள்ளி மாணவி தற்கொலை – காவல்துறையினர் விசாரணை
வீட்டு வேலை செய்யாததை கண்டித்ததால் பொன்விளைந்தகளத்துார் பகுதியை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
செங்கல்பட்டு மாவட்டம்,பொன்விளைந்தகளத்துார் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் காசியம்மாள் மகள் முத்துலட்சுமி வயது 15. இதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 21ம் தேதி, முத்துலட்சுமி வீட்டு வேலைகளை செய்யாததால், தாய் காசியம்மாள் அவரை திட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
அன்று மாலை திரும்பி வந்து பார்த்த போது, முத்துலட்சுமி வாயில் நுரையுடன், வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முத்துலட்சுமி, நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.