மன உளைச்சலில் கல்லூரி மாணவர் தற்கொலை
திருச்சி மாவட்டம், சிறுகளப்பூரில் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் தான் படிக்கும் கல்லூரி பிடிக்காததால் மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே சிறுகளப்பூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.இவரது மகன் 18 வயதான ரஞ்சித். இவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
இவருக்கு அந்த கல்லூரியில் பிடிக்காததால் வேறு கல்லூரியில் சேர்த்து விடுமாறு தன் தந்தையிடம் கடந்த ஒரு வாரமாக கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கல்லூரி மாணவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அவரது பெற்றோர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள தனியார் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி செய்த அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.