மருந்தகத்தில் ஊசி போட்ட மாணவன் பலி : மருந்தக உரிமையாளர் கைது

தனியார் மருந்தகத்தில் போடப்பட்ட ஊசியால் எட்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த்தாக உடற்௯றாய்வு அறிக்கையில் தெரியவந்ததையடுத்து மருந்தக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-06-07 04:44 GMT

கைது செய்யப்பட்ட செந்தில்குமார்

சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் சேர்ந்தவர் ஜெகதீஸ் மகன் கீர்த்திவாசன் எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த மார்ச் 21 ம்தேதி சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாத்தால் சிறுவனின் பெற்றோர் அதே பகுதியில் உள்ள நடுவலூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் செந்தில்குமார் (40) என்பவருக்கு சொந்தமான தனியார் மருந்தகத்தில் மாணவனுக்கு ஊசி போட்டுள்ளனர். திடீரென சிறுவனுக்கு வாந்தி மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படவே பெற்றோர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisement

அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 25 ம் தேதி சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் நகர காவல்நிலையத்தில் சிறுவனின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்த நிலையில் சிறுவனின் உடற்கூறாய்வில் முறையற்ற முறையில் மாணவணுக்கு உடலில் ஒவிரான் மருந்து அளவுக்கு அதிகமாக செலுத்தியதால் இடுப்பு பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மாணவன் உடலில் செப்டிக் ஆனதால் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்நிலையில் தனியார் மருந்துக உரிமையாளர் செந்தில்குமாரை ஆத்தூர் நகர காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News