சேலம் சங்கமம் விழாவில் மாணவி கனிஷ்காவுக்கு கலை இளமணி விருது

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் சேலம் சங்கமம்- நம்ம ஊரு திருவிழா புதிய பஸ் நிலையம் அருகில் மாநகராட்சி திடலில் நடந்தது.

Update: 2024-02-29 01:49 GMT

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் சேலம் சங்கமம்- நம்ம ஊரு திருவிழா புதிய பஸ் நிலையம் அருகில் மாநகராட்சி திடலில் நடந்தது.


தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் சேலம் சங்கமம்- நம்ம ஊரு திருவிழா புதிய பஸ் நிலையம் அருகில் மாநகராட்சி திடலில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் எஸ்.பாலசந்தர், வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவில் பரதநாட்டியத்தில் சிறந்து விளங்கிய மாணவி வி.எஸ்.கனிஷ்காவுக்கு கலை இளமணி விருது வழங்கப்பட்டது.

விழாவில் மொத்தம் 30 பேருக்கு கலைமுதுமணி, கலை நன்மணி, கலை வளர்மணி, கலை இளமணி ஆகிய விருதுகளும், ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்துக்கான பொற்கிழிகளும் வழங்கப்பட்டன. விழாவில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அருள் எம்.எல்.ஏ., துணை மேயர் சாரதாதேவி, கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் ஹேமநாதன், மண்டல உதவி இயக்குனர் நீலமேகன், இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரராமன், இசைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், இசைக்கலைஞர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News