சேலத்தில் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி: ஹோலிகிராஸ் பள்ளி முதலிடம்

சேலத்தில் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் ஹோலிகிராஸ் பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

Update: 2024-01-28 13:22 GMT

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள்

சேலம் மாவட்ட மாணவர் கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நாக்அவுட் முறையில் நடத்தப்பட்டன. இதில் 28 பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

முதல் சுற்று, சூப்பர் சுற்று, கால் இறுதி, அரை இறுதி போட்டிகள் முடிவடைந்து இறுதிபோட்டி நேற்று சேலம் 4 ரோடு லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. இறுதிபோட்டியில் ஹோலி கிராஸ் பள்ளி அணியும், எமரால்டு வேலி பள்ளி அணியும் மோதின. எமரால்டு வேலி பள்ளி அணி முதலில் பேட் செய்தது.

10 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்தது. 2-வதாக பேட் செய்த ஹோலி கிராஸ் பள்ளி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.

இதனையடுத்து நடந்த விழாவில் மாணவர் கிரிக்கெட் சங்க பொதுச்செயலாளர் ஜெயபால் அசோக், தலைவர் முத்துக்குமார், ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.

மேலும் விழாவில் கவுரவ தலைவர்கள் ஏ.செந்தில்குமார், செல்வகீதன், ஹில்சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் அருள் விக்னேஷ், கிரிக்கெட் சங்க துணை செயலாளர் ஐசக்ராஜ், பொருளாளர் உதய்சங்கர், துணைத்தலைவர்கள் சண்முகநாத், பாஸ்கரவேல், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News