கடும்மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மாணவர்கள்

Update: 2023-12-21 09:52 GMT

கடும்மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மாணவர்கள்  

சிவகங்கையில் இயங்கி வரும் சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒன்றினைந்து கடும் மழையால் தங்களது உடைமைகளை இழந்து பெரும் துயரத்தில் இருக்கும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மக்களுக்காக மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் அத்தியாவசிய தேவை பொருள்களை பள்ளி செயலாளர் சேகரிடம் மாணவ, மாணவிகள் வழங்கினர். தானாக முன்வந்து தங்களால் இயன்ற அளவு உதவி பொருள்களை வழங்கிய மாணவர்களின் இந்த செயலை பள்ளி செயலாளர் பாராட்டி அவர்கள் வழங்கிய நிவாரண பொருள்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் ஒப்படைத்தார். பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலானது தற்போது படிக்கும் பள்ளி மாணவ மாணவியர்களிடையே உதவும் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக அமையும் என்பது எவ்வித ஐயமில்லை.
Tags:    

Similar News