காதல் தோல்வியால் மாணவன் மர்ம மரணம்

காதல் தோல்வியால் காதலன் தற்கொலையா காதலி வீட்டாரால் கொலையா நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறையில் போராட்டம்.

Update: 2024-02-01 06:35 GMT

 மாணவன் மர்ம மரணம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் பானுஸ்ரீதர் (21). கல்லூரி இளங்கலை பட்டம் பெற்ற மாணவர் சென்னையில் கம்யூட்டர் கோர்ஸ் படித்து வந்தார். பானுஸ்ரீதர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் வேப்பஞ்சேரி என்ற பகுதியில் தனது டூவீலரில் நிறுத்திவிட்டு மாயமானார். இதுகுறித்து பானுஸ்ரீதரின் தாயார் கஸ்தூரி பொறையார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பானுஸ்ரீதர் கடற்கரை வழியே புதுப்பேட்டை வரை நடந்து சென்றது தெரியவந்துள்ளது. அதன் பின் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று மாலை இறந்த பானுஸ்ரீதரின் உடல் சந்திரபாடி கடற்கரையில் ஒதுங்கியது. தகவல் அறிந்த தரங்கம்பாடி கடலோர காவல் நிலையம் மற்றும் பொறையார் போலீசார் விரைந்து வந்து பானுஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் 174 தற்கொலை வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இறந்த பானுஸ்ரீதரின் உடலில் காயங்கள் உள்ளதாகவும், இறப்பில் சந்தேகம் உள்ளதாககூறி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பானுஸ்ரீதர் திருக்கடையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை காதலித்து வந்த நிலையில் அந்தப் பெண் பானுஸ்ரீதரை நிராகரித்து வேறு ஒருவரை காதலித்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான பானுஸ்ரீதர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'முதலும் நீ முடிவும் நீ" என்று காதலியியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு திருக்கடையூர் வேப்பஞ்சேரி பகுதிக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், பெண்ணின் உறவினர்கள் கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதால் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது .
Tags:    

Similar News