கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-02-11 12:15 GMT

மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்விதநடப்பாண்டில் புதிய மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Student Login- இல் சென்று ஆதார் எண் அளித்து e-KYC verification செய்திடல் வேண்டும்.

Advertisement

இக்கல்வி உதவித்தொகை புதியதிற்கான (Fresh) இணையதளம் (Scholarship portal) 2024 பிப்.1 முதல் செயல்பட துவங்கியுள்ளது. புதிய விண்ணப்பங்களை மாணவர்கள் பிப்.29க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லுாரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News