கஸ்தம்பாடியில் மாணவர்கள் 1000 மரக்கன்றுகள் நடவு

Update: 2023-11-28 04:17 GMT

மரம் நடவு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தில் ஆரணி செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள், எக்கோ கிளப்(சுற்றுச்சூழல் பாது காப்பு), எஸ்.ஐ.டி.பி. பள்ளி புத்தக மேம்பாட்டுத் திட்ட குழுக்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கஸ்தம்பாடி கிராமத்தில் பள்ளித்தாளாளர் தமிழரசி தலைமையில் ஆயிரம் மரக்கன்று களை நடும் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் வடமாதிமங்கலத்தைச் சேர்ந்த அருட்தந்தை பிரிட்டோ வின்சென்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.செயின்ட் ஜோசப் பள்ளி ஆசிரியர்கள் ஜூலியட், தங்கம் ஆகியோர் மரக்கன்றுகளை தேர்வு செய்து நடுவதற்கு வழிகாட்டியாக இருந்தனர்.ஆயிரம் மரக்கன்றுகளை ஆரணி அரிமா சங்கத்தின் செயலர் மோசஸ் வழங்கி, நிகழ்ச்சியில் பங்கேற்று பசுமை உலகை உருவாக்க மாணவ, மாணவிகளை ஊக்குவித்தார்.
Tags:    

Similar News