விழுப்புரம் கண்காணிப்பு மையத்தில் ஆ‌ய்வு

விழுப்புரம் பறக்கும்படை வாகன தணிக்கை கண்காணிப்பு மையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை தேர்தல் காவல்துறை பார்வையாளர் திரேந்திர சிங் குஞ்சியால் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

Update: 2024-03-28 14:56 GMT

ஆய்வு செய்யும் அதிகாரி

2024-நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம், பறக்கும்படை வாகன தணிக்கை கண்காணிப்பு மையம் ஆகியவற்றின் செயல்பாடுகளைதேர்தல் காவல்துறை பார்வையாளர் திரேந்திர சிங் குஞ்சியால் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, தேர்தல் தொடர்பாக வரும் புகார்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், தற்பொழுது வரை தொலைபேசி மற்றும் சி-விஜில் (C-Vigil) மூலமாக வரப்பெற்ற புகார்கள் மற்றும் பராமரிக்கப்டும் பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன்,

புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தீர்வுகள் குறித்தும் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, தேர்தல் தொடர்பாக உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தில், நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வரும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பறக்கும்படை வாகன தணிக்கை கண்காணிப்பு மையத்தில், பறக்கும்படை வாகனங்கள் செல்லும் பகுதிகள், தற்பொழுது வரை பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் மூலம் கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம் மற்றும் பொருட்கள் குறித்து கேட்டறிந்து, ஊடகங்கள் மற்றும் புகார்கள் குறித்து உடனடி தகவல்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்குமாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்களுக்கு இந்த ஆய்வின்போது அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) கணேஷ், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News