மறுகால்தலை கண்டன் சாஸ்தா கோவிலில் திருப்பணிகள் ஆய்வு

Update: 2023-10-30 08:50 GMT

அதிகாரிகள் ஆய்வு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன. இதில் சிறு சிறு கோவில்கள் என 100 கோவில்களை தமிழக அரசு தேர்வு செய்து 2022-23-ம் ஆண்டில் திருப்பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது.

அதன்படி தெங்கம்புதூர் மறுகால்தலை கண்டன் சாஸ்தா கோவிலில் ரூ.20 லட்சத்தில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திருப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அப்போது, ஊர் மக்கள் கோவிலில் கொடிமரம் வைக்க கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் அரசிடம் பேசி நிறைவேற்றி தருவதாக அறங்காவலர் குழு தலைவர் உறுதி அளித்துள்ளார். ஆய்வின்போது தேவசம் பொறியாளர் ராஜ்குமார், ஸ்ரீகாரியம் ஹரி பத்மநாபன், ஊர் தலைவர் மற்றும் உபயதாரர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News