மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு
திண்டுக்கல் லயன் தெருவில் மாநகராட்சி மேயர் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
Update: 2024-06-28 09:32 GMT
திண்டுக்கல் லயன் தெருவில் மாநகராட்சி மேயர் பணிகளை ஆய்வு மேற்கொண்டார் திண்டுக்கல் மாநகராட்சி 11வது வார்டு லயன் தெருவில் மழை நீர் வடிகால் பணிகள் மற்றும் சிறுபாலங்கள் அமைக்கும் பணியை வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பார்வையிட்டார்.
உடன், மண்டல தலைவர் ஆனந்த்,11வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாரியம்மாள் கிருஷ்ணன், 11 வது வார்டு செயலாளர் ஆறுமுகம் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.