வந்தவாசி கிழக்கு ஒன்றியத்தில் பாசறை பூத் கமிட்டி ஆய்வுப் பணி
வந்தவாசி கிழக்கு ஒன்றியத்தில் 8 கிராமங்களில் இளைஞர் இளம்பெண்கள் பாசரை பூத் கமிட்டி ஆய்வுப் பணி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் கிழக்கு ஒன் றிய அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசரை பூத் கமிட்டி ஆய்வுப் பணியில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பி கணேசன் கலந்துகொண்டு பேசினார். வந்தவாசி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் மருதாடு கீழ்க்கொடுங்காலூர், மேல் கொடுங்காலூர், வழூர், சாத்தனூர் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த இளைஞர் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி நிர்வாகி கள் சரிபார்க்கும் கூட்டம் நேற்று மருதாடு கிராமத்தில் உள்ள ஏ ஜே திருமண மண்டபத்தில் நடந்தது.
மாவட்ட அவைத்தலைவர் டி கே பி மணி தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் ஹோட்டல் எம் பாஷா,வந்தவாசி வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ முனுசாமி, தெள்ளார் ஒன்றிய செய லாளர் எம் தனசேகர், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் எம் சக்கரபாணி, இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் எம் நாகரத்தினம், ஒன்றிய கவுன்சிலர் மகாலட்சுமி ராமச்சந்திரன், பேரவை நகரச் செயலாளர் வி. மேகநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ லோகேஸ்வரன் வரவேற்றார். இதில் இதில் அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்.எல்ஏவும் மான வாஜாபாத் பி.கணேசன், வடக்கு மாவட்ட செய லாளர் தூசி.கே.மோகன்ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் விமலாமகேந்திரன், மாவட்ட பொருளாளர் ஆலத் தூர் எம்.சுப்பராயன், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் சத்தியவாடி கே.பாஸ்கர் ரெட்டியார், பெரணமலூர் ஒன்றிய செயலாளர் ஜி. செல்வராஜ். செய்யாறு வடக்கு ஒன்றிய செயலாளர் வி. மகேந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் பந்தல் சேகர், பேரவை மாவட்ட துணைத்தலைவர்கள் எஸ் தர்மதுரை, ஜேசிபி ராஜ், ஓசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வேணுகோபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.