பத்திரப்பதிவு செய்யாமல் காக்க வைத்த சப் ரிஜிஸ்டர் - புகார்

Update: 2023-11-10 01:50 GMT

 அப்துல் சர்தார் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் வெளிப்பட்டினம் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவாளராக உள்ள கண்மணி என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் அப்துல் சர்தார் என்பவரிடம் டோக்கன் பதிவு செய்து பத்திரப்பதிவு செய்யாமல் ஏழு மணி நேரம் காக்க வைத்து அலுவலகத்தை பூட்டிச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. சப் ரிஜிஸ்டர் கண்மணி மீது நடவடிக்கை எடுக்க கோரி வெளிநாட்டு பயணி அப்துல் சர்தார் பத்திரிக்கையாளர்களை சந்தித்து முறையிட்டார். நாளை 10:00 மணிக்கு வெளிநாடு செல்வதற்காக டிக்கெட் பதிவு செய்து ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள விமான டிக்கெட்டையும் சப்ரிஸ்டர் கண்மணியிடம் காண்பித்துள்ளார்.சரி சற்று அமருங்கள் பதிவு செய்து தருகிறேன் என்று உறுதியளித்தும் பல மணி நேரம் காத்திருக்க வைத்து விட்டு பத்திரம் பதிவு செய்யப்படாமல் வீட்டுக்கு சென்று விட்டார். இது பற்றி சப்ரிஜிஸ்டர் ராமநாதன் என்ற மேற்பார்வையாளர் சப் ரிஸ்டர் கண்மணியிடம் அப்துல் சர்தாருக்கு  உடனடியாக பத்திரத்தை பதிவு செய்து கொடுங்கள் என்று கூறியும் நிராகரித்துவிட்டு உடனடியாக ஜீப்பில் ஏரி சென்றதால் சூடியூர் கிராமத்தைச் சேர்ந்த வெளிநாட்டு பயணிக்கு விமான கட்டணம் ரூபாய் 25 ஆயிரம் வீணானதாக மிகவும் மன வருத்தத்துடன் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

Tags:    

Similar News